• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலவசமாக உணவளிக்க முடியாது : வேலை செய்ய முடியாத அரச ஊழியர்கள் இருந்தால் உடனே வெளியேறவும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்க திட்டம் – பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/06
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
71 0
A A
0
42
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் எனTk; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, தனது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. அதே வேளை இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது. 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும்.

கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்த சபை அமைய வேண்டும். இந்த வார இறுதிக்குள் தேசிய சபையை அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட   வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம்.

இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது.28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

Related

Tags: ranil
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி!

Next Post

சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

Related Posts

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!
இலங்கை

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
Next Post
சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

சீனப் பொருளாதாரத்திற்கு பலத்த அடி?

ஐ.என்.எஸ்.விக்ராந்த் – இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கவசம்

ஐ.என்.எஸ்.விக்ராந்த் – இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு கவசம்

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.