பளை பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் இராணுவத்திற்கு வழங்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுமபோது ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பளை பச்சிமலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்டத்தில் வசிக்கும் காணியற்ற மக்களுக்கும் காணாமற்போனவர்களின் உறவுகள் மற்றும் இப்பிரதேச மக்களுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ முகாம்களை அமைப்பதற்கு நிறைய காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.