திருகோணமலை வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசம் மாசுபடும் வகையில் சிலர் செயற்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமய விவகார அமைச்சர் ஆகியோர் இந்தப் பகுதிக்கு வருகை தந்து இவ்விடயங்களை நேரடியாக ஆராய்ந்து இந்துக்களுக்கு அநீதி இழைக்காத வகையில் நிலைமையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.