மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.
இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்ட தொடக்க விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதந்தார். அப்போது, உணவு விநியோகத்திற்கான வாகனங்கள் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்துவைத்தார்.
பின்னர், ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்ப பாடசாலையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை ஆரம்பித்து வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி பின் ஊட்டிவிட்டார். இதனால் மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.



















