சீனாவில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மின்சார நுகர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன.
தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின் படி, உற்பத்தி கொள்முதல் மேலாளர்களின் குறியீடு ஜூலையில் 49.0 இருந்து 49.4 வரை உயர்ந்ததுள்ளது.
முந்தைய இரண்டாவது காலாண்டில் சீனாவும் பொருளாதாரச் சுருக்கத்தைத் தவிர்த்தது. மீண்டும் மீண்டும் முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார சரிவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில், மின்சார நுகர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மேலும் இழப்பைக் வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன் கொரோனா பரவலாது நாட்டை மீண்டும் திறக்கும் நிலைமைகளை குறைத்துள்ளதோடு சொத்து விற்பனைத்துறையும் வீழ்ச்சி அடைந்துள்ளது என இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சி ஆலோசனை மூலதன பொருளாதாரத்தின் மூத்த சீன பொருளாதார நிபுணர் ஜூலியன் எவன்ஸ்-பிரிட்சார்ட் கூறினார்.
அதேநேரம், நிக்கி ஏசியா செய்தி முகவரகத்தின் கூற்றுப்படி, ஜூலையில் எதிர்பாராத விதமாக நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சீன பொருளாதாரநிலைமைகள் முன்னேற்றத்தை காண்பித்தன.
இருப்பினும், சேவைத் துறையை உள்ளடக்கிய உற்பத்தி அல்லாதவை ஆகஸ்ட் மாதத்தில் 53.8 மதிப்பிலிருந்து 52.6 ஆக சரிந்ததுள்ளது.
இந்நிலையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்மாகும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் மூன்றாவது தடவையாக தலைமையைக் கொள்ளவுள்ள ஷி ஜின்பிங்கிக்கு சவால்கள் உருவாகியுள்ளது.
குறிப்பாக, பூச்சிய கொரோனா கொள்கை, வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், மத்திய வங்கி வட்டி வீதங்கள் குறைத்தமை, வீட்டுக் கடன்களின் வருமானம், அடமானங்களின் வருமானம் குறைதல், முக்கிய அங்கமான சீனாவின் சொத்துச் சந்தை நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளமை, உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதுமட்டுமன்றி, சீனா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட வெப்ப அலைகளால் குளிரூட்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால் மின்சாரநுகர்ச்சியும் அதிகமாகியுள்ளது.
குறிப்பாக, சிச்சுவான் மாகாணம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதைத் தொடர வேண்டுமானால் தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா முடக்கல்கள் காரணமாக, பலர் வேலையில்லாமல் உள்ளனர். குறிப்பாக சேவைத் துறைகளில் உள்ளவர்கள் தடுமாற்றத்தைக் கண்டுள்ளனர்.
இந்நிலையானது, தொழிற்சாலை உற்பத்தி, விநியோகச் சங்கிலிகளை பாதித்துள்ளது. உலகின் பிற பகுதிகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசேடமாக உள்நாட்டில் நுகர்வோர் விலை 2.5 சதவீதம் உயர்ந்துள்ளமை பொதுமக்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.