தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் சில சிவிங்கி புலிகளை இந்தியா வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமிபியாவில் இருந்து பெறப்பட்ட 8 சிவிங்கி புலிகளை மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகேவுள்ள குனோ உயிரியியல் பூங்காவில் பிரதமர் மோடி விடுவித்தார்.
நமிபியாவிலிருந்து இந்தியாவுக்கு அவற்றை கொண்டு வரும் பணியை ஒருங்கிணைத்த சிவிங்கி புலி பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் லோரி மார்க்கர், நமிபியாவிடம் இருந்து மேலும் 2 சிவிங்கி புலிகள் பெறப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் தென்னாப்பிரிக்கா நாட்டிடம் இருந்து சிவிங்கி புலிகளை வாங்குவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் லோரி மார்க்கர் குறிப்பிட்டார்.