அடுத்த மாதம் மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொரிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் அங்கு வேலைகளுக்கு அனுப்பப்படுவதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டில் இதுவரை 3100 வேலைகளுக்காக கொரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.
உற்பத்தி, கட்டுமானம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு இந்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 500 பேர் இஸ்ரேலில் வேலைக்காக தகுதி பெற்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.