ஐ.நா. சபையின் 77வது பொதுச் சபைக்கு இணையாக அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்ற கல்வி மேம்பாடு உச்சி மாநாட்டில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டார்
உலகளாவிய கல்வி நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இந்த உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் கல்வி அமைச்சர்கள் இந்த கல்வி மேம்பாடு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கல்வி அமைச்சர் உச்சிமாநாட்டில் விளக்கினார்.
இந்நிலையில் கல்விக்கான சர்வதேச நிதி திட்டம் ஊடாக இலங்கைக்கும் ஆதாயம் கிட்டும் என நம்புவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.