பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், ஆகிய பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த மாவட்டங்களில் பெரும்போக நெற்செய்கைகள் ஒக்டோபர் முதல் தொடங்கவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை இலகுவாக கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைவாக யூரியா உரத்தை 10,000 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.