உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகள் பிடியில் இருந்த 5 பிரித்தானிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தி பல மாதங்களாக அவர்களுக்கு ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் துன்பங்களுக்கு முடிவு கட்டியது என்று பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறினார்.
ஐந்து பிரித்தானியர்கள் உட்பட 10 கைதிகளை ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் பரிமாற்றம் செய்ததாக சவூதி அரேபியா கூறியது.
உக்ரைன் படைகளுடன் போரிடும்போது பிடிபட்ட ஐடன் அஸ்லின், ஜோன் ஹார்டிங் மற்றும் ஷான் பின்னர் ஆகியோர் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
அவர்களின் விடுதலையானது இதுவரை நடந்த போரின் மிக முக்கியமான கைதிகள் இடமாற்றத்தின் ஒரு பகுதியாக வந்தது. அசோவ் படைப்பிரிவின் தளபதிகள் உட்பட, 215 உக்ரைனிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதற்கு ஈடாக, உக்ரைன் 55 ரஷ்ய வீரர்களையும், தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்த ரஷ்யாவுக்கு ஆதரவான உக்ரைனிய அரசியல்வாதியும் தன்னலக்குழுவினருமான விக்டர் மெட்வெச்சுக்கை ஒப்படைத்தது.
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு மூன்று கைதிகள் விமானத்தில் இருந்து வந்திறங்குவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. சவுதி அதிகாரிகள் குழுவுடன் அவர்கள் வந்துள்ளனர்.