லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விலை குறைப்பு நேற்று முதல் வரும் 30ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ வெள்ளை சீனி 7 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 278 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
185 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 6 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 179 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியை 9 ரூபாயால் குறைத்து நுகர்வோருக்கு வழங்க சதொச கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, புதிய விலை 185 ரூபாயாக உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 14 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய விலை 415 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.