சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூயோர்க்கில் ஐ.நா.பொதுச் சபையின் 77 ஆவது கூட்டத் தொடரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியை சந்தித்தும் அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது இருதரப்பும், நீண்டகால நட்புறவுக்கான தங்கள் உறுதிப்பாட்டையும் ஒத்துழைப்பையும் தொடர உறுதியளித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அஹ்மத் அல் சயீக், முதலீடுகள் மற்றும் விமான இணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழை குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், நேபாளம் மற்றும் இலங்கை உறவுகளின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடியுள்ளார்.