லாவர் கிண்ணத் தொடரில் ஒரு உணர்ச்சிகரமான இரவில் சக சிறந்த வீரரான ரஃபேல் நடாலுடன் இணைந்த பிறகு, கண்ணீர் மல்க ரோஜர் பெடரர் தொழில்முறை டென்னிஸுக்கு விடைகொடுத்தார்.
20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
லண்டனில் உள்ள ‘ஒடூ’ அரங்கில் தனது பெயரைக் கோஷமிட்ட ஆயிரக்கணக்கான இரசிகர்களின் பாராட்டைப் ஃபெடர் பெற்றார். ஃபெடரர், நடால் மற்றும் பிற வீரர்களைக் கட்டிப்பிடித்து அழுதார். நடாலாலும் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார். இதன்போது, ஃபெடரரும் நடாலும் – அன்புடன் ‘ஃபெடல்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஃபெடரர், ‘இது ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சோகமாக இல்லை. இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அதை முடித்ததில் மகிழ்ச்சி,’ என்று கூறினார்.
ஆடவர் விளையாட்டின் உச்சியில் இருந்த நீண்ட போட்டியாளர்களாக ஃபெடரர் மற்றும் நடால் ஐரோப்பாவிற்கும் அமெரிக்க ஜோடி ஜெக் சாக் மற்றும் பிரான்சிஸ் தியாஃபோ ஆகியோர் உலக அணிக்காகவும் களமிறங்கினர்.
இப்போட்டியில், 4-6, 7-6, 11-9 என்ற செட் கணக்குகளில் ஜெக் சாக் மற்றும் பிரான்சிஸ் தியாஃபோ ஜோடி வெற்றிபெற்றது.