ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இருப்பதனை கருத்திற்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க மதகுருமார்கள், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட பல தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.