இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையப் போவதில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பேரவையில்இணையாது என நாடாளுமன்றதிற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என்றும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையே தற்போது ஆட்சியில் இருக்கின்றது என்றும் எதிர்காலத்தில் நாட்டின் தீர்மானங்களை அவர்களே எடுப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தேசிய பேரவை என்று கூறிக் கொண்டு உருவாக்கப்படும் சபையில் அங்கம் வகிப்பதில் எவ்வித பயனும் இல்லை என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.