அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில் இன்று மதியம் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க கோரகே தொன் சானக சதுரங்க குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் முகப்பகுதி சிறிது சிதைந்த நிலையில் காணப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













