64 வருட கால சட்டத்தை மக்கிய பெட்டியில் இருந்து எடுத்து மக்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சொந்த மக்களை அடக்கும் திட்டத்தின் நேரடி விளைவாக, சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கை சிக்கலில் மாட்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சி தரப்பில் இருந்து அதிகபட்ச முயற்சியுடன் செயற்படுவேன் என கூறியுள்ளார்.
நாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடன படுத்தியமை மூலம் சுற்றுலா பயணிகள் கூட வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடக்குமுறைகள் அனைத்தும் மக்களை வாயடைக்கச் செய்யப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டில் நிலவும் போசாக்கு குறைபாடு, உணவு, மருந்து தட்டுப்பாடு குறித்த தகவல்களை வெளியிடும் அதிகாரிகளை கூட விசாரணை என கூறி அழைத்து வந்து மிரட்டுவதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.