ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேசிய பேரவையை நியமித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கொண்டவர் தெரிவித்துள்ளார்.
முதலில் தேசிய பேரவையை நியமித்து அதன் பின்னர் கலந்துரையாடி உரிய நியமனங்களை செய்திருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அமைச்சரவையை நியமித்ததன் பின்னர் தேசிய பேரவையை ஜனாதிபதி அமைக்க உள்ளதாகவும், அதற்கு பங்களிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.