ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து விசேட வைத்தியர் கௌசல்யா கஸ்தூரிஆராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கர்ப்பிணிகளின் உடல் நிறை குறியீட்டின் படி இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரை 18.5 சதவீதத்துக்கு குறைவான தாய்மார்களுள் 15 சதவீதமானவர்கள் உரிய நிறை குறியீட்டை பூரணப்படுத்த முடியாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.