மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கோப் தலைவருக்கான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ரஞ்சித் பண்டார 14 வாக்குகளைப் பெற்ற அதேவேளை எ ரான் விக்கிரமரத்ன 7 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஜே.வி.பி.யின் உறுப்பினரான சுனில் ஹதுன்நெத்தி அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இருந்த போதிலும், இம்முறை கோப் குழுவின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அதனை புறக்கணித்தமை நியாயமற்றது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.