தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, தாமரை கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை கவர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
350 மீட்டர் உயரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் சுமார் 130 பங்கி ஜம்பிங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவற்றில் இரவு நேரத்தில் மாத்திரம் 30-40 பங்கி ஜம்பிங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.