மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ‘விளையாடி மகிழ்வோம்” எனும் தொணிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.