வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக முதன்மைச் செயலாளர் ராகேஷ் பாண்டே ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், விவசாயத் துறை,வெளிநாட்டு கையிருப்பை பராமரிக்க ஏற்றுமதி உற்பத்தி நிறுவனங்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் சில இறக்குமதிகள் நிறுத்தப்பட்டதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பல வர்த்தக உடன்படிக்கைகள் முடிவுக்கு வரவில்லை எனவும் இந்த முரண்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்ய அமைச்சரவை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.