மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ குடும்பங்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக மீனவ குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து, 100 நாட்கள் செயல்முனைவின் 69வது நாள் போராட்டம் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளா பிரிவுக்கு உட்பட்ட மீனவர் வீட்டுத்திட்ட பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடுவது எமது உரிமை , கருத்துச்சுதந்திரம் எமது உரிமை, வடகிழக்கில் உள்ள மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை தாருங்கள் போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
மேலும் இப் போராட்டத்தில் செயற்பாட்டாளர்கள், இளைஞர் கழக மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.