உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தேர்தல் நடந்தால் அரசாங்கத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உத்தரவாதம் இருக்காது என்பதனால் பல்வேறு சூழ்ச்சிகளை அவர்கள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்ற சூழலில் தேர்தல் முறை சரியில்லை எனக் கூறி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைக்க முயன்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் நீதிமன்றத்தின் மூலம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.