உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் சபையினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்திற்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதனை அனைவரும் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானங்களுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.