யாழ் .மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இன்று (திங்கட்கிழமை) பிறப்பு பதிவு செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவு செய்யும் விசேட நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா அவர்களால் இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவினை மேற்கொண்டதோடு இதில் 25 பேரிற்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றதோடு பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் என பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.