• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

Negotiations to advance the Sri Lanka–Thailand Free Trade Agreement

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/24
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்லாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நேற்று (23) அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாட்டு வர்த்தக சமூகத்தினருக்கும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் பரிமாற்றத் திட்டங்களையும் இலகுபடுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான நகர்வாகும் என இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவித்தல், சுற்றுலாத் தொழில்துறையுடன் தொடர்புடைய பங்குடைமைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்து சமுத்திரத்தின் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தனித்துவமான புவியியல் அமைவிடத்தையும், முக்கிய கடல்சார் மற்றும் துறைமுக மையமாக அதன் வகிபாகத்தையும் கருத்தில் கொண்டு, கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்பாக உணவுப் பதப்படுத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம், நிபுணத்துவ அறிவுப் பகிர்வு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி, விவசாயத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2027 ஜனவரியில் நடைபெறவுள்ள எக்ஸ்போ ஸ்ரீலங்கா (Expo Sri Lanka) கண்காட்சியில் பங்கேற்று, இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது அழைப்பு விடுத்தார்.

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் மூலம் பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகத் தாய்லாந்து அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்சார் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தினார்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் Paitoon Mahapannaporn உள்ளிட்ட தூதுக்குழுவினரும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Negotiations to advance the Sri Lanka–Thailand Free Trade Agreement
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்!

Related Posts

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி
இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்!

2026-11-24
இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

இடி, மின்னல் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை!

2026-11-24
அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாட்கள் பூட்டு!
இலங்கை

அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாட்கள் பூட்டு!

2026-11-24
பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!
இலங்கை

பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

2026-11-24
அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு
இலங்கை

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

2026-11-24
தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு
இலங்கை

தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு

2026-11-24

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் 19ஆம் திகதி

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்!

0
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை

0
நியூயோர்க்கில் கோலாகலமாக நடைபெற்ற 54ஆவது சர்வதேச எம்மி விருது விழா

நியூயோர்க்கில் கோலாகலமாக நடைபெற்ற 54ஆவது சர்வதேச எம்மி விருது விழா

0
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பா தயார் – ஜேர்மன் அதிபர்

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பா தயார் – ஜேர்மன் அதிபர்

0
லண்டனில் மிகப்பெரிய அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் கண்டுபிடிப்பு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: