தலைநகர் லண்டனில் மிகப்பெரிய அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் நியூ ஸ்பிட்டல்ஃபீல்ட்ஸ் சந்தைப் பகுதியில் இந்தப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓரஞ்சுப் பழங்களை ஏற்றிச் செல்லும் பெட்டிகளுக்குள் கொக்கைன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக 893 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இந்தச் சம்பவத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கடத்தல் தொடர்பாக இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாருக்காகக் கடத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடத்தல் வலையமைப்பில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதால் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
லண்டனில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பறிமுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.















