பிரித்தானியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்புரி உதவிகளை வழங்கும் நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடுமையான உடல்நல பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் மருத்துவ மதிப்பீடுகளை மேற்கொள்ளும் நடைமுறையைத் தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியுடையவர்களுக்கு நலன்புரி உதவிகளை விரைவாக வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் தொடர்பான பரிந்துரைகள் நலன்புரி உதவிகளைப் பெறுவோரின் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















