பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால், வளர்ப்புப் பறவைகளைப் பாதுகாப்பான இடங்களில் அடைத்து வைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நண்பகல் முதல் இந்த உத்தரவு சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
50 அல்லது அதற்கு மேற்பட்ட பறவைகளை வளர்ப்பவர்கள் அவற்றைக் கட்டாயம் உள்ளே வைத்திருக்க வேண்டும்.
50க்கும் குறைவான பறவைகளை வளர்ப்பவர்களுக்கும், அவற்றின் முட்டைகள் அல்லது இறைச்சிப் பொருட்களை விற்பனை செய்தால் இந்த உத்தரவு பொருந்தும்.
பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், கோழிப் பண்ணைகளைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

















