• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்லாந்து இராச்சியத்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசாக் புவாங்கெட்கியோ (Sihasak Phuangketkeow) தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று (23) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். 

அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாட்டு வர்த்தக சமூகத்தினருக்கும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் சாதாரண கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 30 நாள் காலப்பகுதிக்கு விசா இன்றித் தாய்லாந்துக்குள் பிரவேசிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், 2026 நவம்பர் 22 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். 

இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் பரிமாற்றத் திட்டங்களையும் இலகுபடுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கியமான நகர்வாகும் என இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவித்தல், சுற்றுலாத் தொழில்துறையுடன் தொடர்புடைய பங்குடைமைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 

இந்து சமுத்திரத்தின் மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தனித்துவமான புவியியல் அமைவிடத்தையும், முக்கிய கடல்சார் மற்றும் துறைமுக மையமாக அதன் வகிபாகத்தையும் கருத்தில் கொண்டு, கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்பாக உணவுப் பதப்படுத்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம், நிபுணத்துவ அறிவுப் பகிர்வு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி, விவசாயத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2027 ஜனவரியில் நடைபெறவுள்ள எக்ஸ்போ ஸ்ரீலங்கா (Expo Sri Lanka) கண்காட்சியில் பங்கேற்று, இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு தாய்லாந்து முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது அழைப்பு விடுத்தார்.

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் மூலம் பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இரு தரப்பினரும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகத் தாய்லாந்து அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்சார் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தினார்.

இந்நிகழ்வில், இலங்கைக்கான தாய்லாந்துத் தூதுவர் Paitoon Mahapannaporn உள்ளிட்ட தூதுக்குழுவினரும், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

Related

Tags: Harini AmarasuriyaSihasak PhuangketkeowThailandசிஹாசாக் புவாங்கெட்கியோஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

Next Post

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

Related Posts

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!
அமொிக்கா

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

2026-11-24
2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!
ஆசிரியர் தெரிவு

150 கிராம் எடையில் 5,700 கி.மீ. இடைவிடாத பயணம் – இயற்கையின் வியக்கத்தக்க அதிசயம்!

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு
இலங்கை

தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு

சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!
இலங்கை

சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!

2026-11-24
Next Post
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

0
பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

0
2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

0
150 கிராம் எடையில் 5,700 கி.மீ. இடைவிடாத பயணம் – இயற்கையின் வியக்கத்தக்க அதிசயம்!

150 கிராம் எடையில் 5,700 கி.மீ. இடைவிடாத பயணம் – இயற்கையின் வியக்கத்தக்க அதிசயம்!

0
அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

0
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் என்விடியா தலைமைப் பொறுப்பில் ஜென்சன் ஹுவாங்!

2026-11-24
பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணியுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு!

2026-11-24
2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

2026-11-24
150 கிராம் எடையில் 5,700 கி.மீ. இடைவிடாத பயணம் – இயற்கையின் வியக்கத்தக்க அதிசயம்!

150 கிராம் எடையில் 5,700 கி.மீ. இடைவிடாத பயணம் – இயற்கையின் வியக்கத்தக்க அதிசயம்!

2026-11-24
அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

2026-11-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: