காலி முகத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால் பொலிஸாருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.