கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் கிராமத்தில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதியை ஆண்ட நுளம்பர்களின் பழங்கன்னட பொறிப்புள்ள நடுகல் ஒன்றும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடுகற்களில் பல்லவர் காலத்தை சேர்ந்த இரண்டை தொல்லியல் துறையைச் சேர்ந்த பூங்குன்றன் நேரில் ஆய்வு செய்து படித்தளித்தார்.
அதில், முதல் நடுகல்லில், சாத்தனாதி சேத்தன் என்பவர் பொருமந்தைகளை மீட்கும் போது இறந்துள்ளார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் நடுகல் சில சொற்களைத் தவிர படிக்க இயலாதவாறு மிகவும் தேய்ந்துள்ளது. மூன்றாம் நடுகல், நுளம்பர் காலத்தை சேர்ந்தது.
நுளம்ப மன்னன் அன்னிகன் வெட்டியது. இந்த வீரக்கல்வெட்டு, குன்னத்தூர் கிராமத்திற்கு வெளியே உள்ள வயல்களில் காணப்படுகிறது.
இது கன்னட மொழி மற்றும் 9ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது மற்றும் அன்னிகாவின் ஆட்சிக்கு சொந்தமானது. போரில் இறந்த வீரன் அனிமத்யாவின் மரணத்தை பதிவு செய்துள்ளது.