22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சட்டமூலம் குறித்து சுதந்திரக் கட்சி நல்லதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என நம்புவதாக அதன் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் 30 உறுப்பினர்கள் இதற்கு எதிராக இருப்பதாக சாகர காரியவசம் தெரிவித்தாலும் சட்டமூலத்தை நிறைவேற்ற இந்த எண்ணிக்கை தடையாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற 225 உறுப்பினர்களில் 147 பேரின் வாக்குகளே தேவை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவுவது என்பது அரசாங்கத்தின் பிரச்சினை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.














