இந்தியாவின் மாதாந்த எரிபொருள் தேவை நவம்பர் 2021 இற்கு பின்னர் செப்டெம்பர் மாதத்தில் மிகக் குறைந்துள்ளது.
அரசாங்கத்தின் தரவுகளின்படி, செப்டெம்பரில் மொத்த மாதாந்திர எரிபொருள் தேவை ஆகஸ்ட் மாதத்திலிருந்து 3.6சதவீதமாகக் குறைந்தது.
இருப்பினும் செப்டம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது இது 8.1சதவீதம் அதிகரித்துள்ளது.
‘இந்திய எண்ணெய் தேவையின் வீழ்ச்சியைப் பார்க்கும்போது, அதன் ஒரு பகுதி சுத்திகரிப்பு நிலையங்களின் பருவகால பராமரிப்புடன் தொடர்புடையதாக உள்ளது’ என சிகாகோவில் உள்ள பிரைஸ் ஃபியூச்சர்ஸ் குழுமத்தின் ஆய்வாளர் பில் ஃபிளின் கூறினார்.
எரிபொருள் நுகர்வானது செப்டெம்பரில் 17.18 மில்லியன் தொன்களாக இருந்தது, இதுவே கடந்த ஆண்டு 15.89 மில்லியன் தொன்களாக இருந்தது.
டீசல் அல்லது பெற்றோலின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 13.4சதவீதம் உயர்ந்து 6.26 மில்லியன் தொன்களாக இருந்தது, ஆனால் இந்த அளவானது மாதாந்தம் 1.4சதவீதம் குறைந்துள்ளது.
பெற்றோலிய விற்பனை முந்தைய ஆண்டை விட 8.8 சதவீதம் அதிகரித்து 2.83 மில்லியன் தொன்களாக இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து பெறப்பட்ட ஆரம்பவிற்பனைத் தரவுகள், இந்திய மாநில சுத்திகரிப்பு நிறுவனங்களின் பெற்றோல் விற்பனை ஒரு வருடத்திற்கு முந்தையதை விட செப்டெம்பரில் கடுமையாக உயர்ந்துள்ளது.
வீதிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற்றுமின் விற்பனை 16சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் எரிபொருள் எண்ணெய் பயன்பாடு செப்டெம்பர் மாதத்தில் 9சதவீதம் அதிகரித்துள்ளது.
திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயு விற்பனை 3.5சதவீதம் அதிகரித்து 2.45 மில்லியன் தொன்னாகவும், நாப்தா விற்பனை 6.4சதவீதம் குறைந்து 1.08 மில்லியன் தொன்னாகவும் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ரஷ்யா மீதான கடுமையான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள், ஏற்கனவே சந்தைகளில் எதிர்கால விநியோகங்களைக் கட்டுப்படுத்தலாம் என்ற கவலைகள் காணப்படுகின்றன.
இந்திய மாநில எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கள் கச்சா விநியோக ஒப்பந்தங்களை முடிவுறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளன என்று மாநில சுத்திகரிப்பு நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.