மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது என பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அம்பாறை – பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3 மர ஆலைகள் உள்ளிட்ட களஞ்சிய சாலைகள் இவ்வாறு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து வருகை தந்த கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.