இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஓலைத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற் படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று இருந்தது.
மேலும் இந்தக் கலந்துரையாடலில், கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் மற்றும் குஞ்சு பராமரிக்கும் நிலையம் போன்றவற்றிற்கான இந்திய தனியார் முதலீட்டாளர்களின் அனுபவத்தினையும் நவீன தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் கடற்றொழில் சார் மக்களால் உருவாக்கப்பட்டு வருகின்ற கடலட்டை பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.