மன்னாரில் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் வழிநடத்தலின் கீழ் பிரதேச செயலக முன் வளாகத்தில் உள்ளூர் உற்பத்திகளுக்கான விற்பனைச் சந்தையானது இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த உள்ளூர் உற்பத்தி சந்தையினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ .ஸ்டான்லி டிமெல் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த சுய தொழில் ஊக்குவிப்பு சந்தையில் மன்னாரில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.