மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்துடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கல்வி உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
மஹாபொலவில் சராசரி மாதாந்த உதவித்தொகை 5000 என உயர்கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் நாட்டின் தற்போதைய சூழலை அடிப்படையாக கொண்டு இந்த தொகை 50% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.