இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் அல்லது மோசமடைந்தால், அது தனியார் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கலாம் என பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
நுகர்வுப் பொருட்கள், மின் உற்பத்தி, கட்டட பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களே அதிகம் பாதிக்கப்படும் அந்த அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை மற்றும் லாபத்தை பாதிக்கும் குறிப்பிடத்தக்க செலவு பணவீக்கம், இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் என்பன அடுத்த 12-18 மாதங்களில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முக்கிய அபாயங்கள் என்றும் சுட்டிகாட்டியுள்ளது.
அடுத்த 12-18 மாதங்களில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்தால், மதிப்பட்டதன்படி சுமார் 50 விகிதமான நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றும் பிட்ச் ரேட்டிங்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.