அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும் நாளை, திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த சட்டமூலம் தொடர்பான இறுதிக் கருத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாளைய தினம் அறிவிக்கும் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.