22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான சாதனை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை செல்லுபடியற்றதாக்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் கண்ணியம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கும், எடுக்கப்பட்ட இந்த முயற்சி புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும் வரை உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கவும், பாரிய ஊழலை நாட்டிலிருந்து விலக்கவும் நீதிக்கான தேசிய இயக்க எதிர்காலத்தில் முன்னின்று செயற்படும் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.