பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக், புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார்.
குறிப்பாக முன்னாள் பிரதமர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்பளித்துள்ளார்.
இதில் பிரித்தானியாவின் துணைப் பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர்.
லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவி வகித்து, அதிமுக்கிய ஆவணம் ஒன்றை தனது தனிப்பட்ட இ-மெயில் வழியாக சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனை ரிஷிசுனக் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமித்துள்ளார்.
வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித், மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் இராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அலோக் சர்மா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பிரித்தானியாவின் நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்ந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.