ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 குழு-01இல் நடைபெற்ற தொடரின் 32ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 145 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பிரிஸ்பேன் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் ஆப்கானிஸ்தான் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குர்பாஸ் 28 ஓட்டங்களையும் உஸ்மான் கானி 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தற்போது 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகின்றது.