வட மற்றும் தென் கொரிய நாடுகள் ஏவுகணைகளை ஒன்றுடன் ஒன்று கடலோரப் பகுதியில் முதல் முறையாக ஏவியுள்ளன.
பியோங்யாங் ஏவுகணையை ஏவிய மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் சியோல் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஏவுகணை பரிசோதனையானது ஏற்றுக்கொள்ள முடியாத அத்துமீறல் என தென் கொரியா அறிவித்துள்ளது.
இதேநேரம் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்தால், தென் கொரியாவும் அமெரிக்காவும் வரலாற்றில் மிகக் கொடூரமான விலையை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்தது.
ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் விரைவில் அணு ஆயுதச் சோதனையை வடகொரியா மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வடகொரியாவுக்கு அணுவாயுதத்தை தயாரிக்க தேவையான அனைத்து தயாரிப்புகளும் முடித்துவிட்டதாக அமெரிக்க, தென் கொரிய உளவுத்துறை கூறியுள்ளது.