உக்ரேனிய தலைநகரின் உள்கட்டமைப்பு மீதான ரஷ்ய தாக்குதல்களின் பின்னர், தண்ணீர் மற்றும் மின்சார விநியோகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேவைகளை மீண்டும் தொடங்கிய போதும் மின்சாரத் தேவையை நிர்வகிக்க திட்டமிடப்பட்ட பகுதியளவு மின்தடைகள் தொடரும் என கிய்வ் மேயர் தெரிவித்துள்ளார்.
கிரிமியாவில் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மீதான தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் உள்கட்டமைப்பு மீது சமீபத்திய தாக்குதல்கள் இடம்பெற்றன.
இந்த தாக்குதல் காரணமாக தலைநகரின் 80 விகிதமானோருக்கு தண்ணீர் இல்லாமல் இருந்தது, நூறாயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டன.
இந்த தாக்குதலை அடுத்து தண்ணீரை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.