மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவரின் முதல் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நேருக்கு நேர் சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், உலக அமைதிக்காக மாற்றம் மற்றும் கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உறுதி பூண்டனர்.
பதற்றமான காலங்களில் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது நல்லது எனவும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் இதன்போது ஷோல்ஸ் ஸிக்கு தெரிவித்தார்.
ஜேர்மனி ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளை அதிகமாக நம்பியிருந்தது. ஆனால், உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பிற்குப் பதிலடியாக ஜேர்மனி விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யா விநியோகங்களைத் துண்டித்தபோது ஜேர்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது.
எனினும், சர்வாதிகாரமாக வளர்ந்து வரும் சீனாவுடன் ஒப்பந்தங்களைத் தொடங்குவதற்கான ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் வெளிப்படையான விருப்பம், தற்போது பலராலும் விமர்சிக்க வழிவகுத்துள்ளது.