அரசியலமைப்பின் 44/3 சரத்தின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அரசியலமைப்பின் 44/3 ஆவது சரத்தின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
இதன்படி பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள், தேசிய கொள்கை அமைச்சுகள், தொழில்நுட்ப அமைச்சுகள் மற்றும் பல அமைச்சுக்களை ஜனாதிபதியின் கீழ் வைத்திருப்பது தொடர்பான 44/3ஆவது பிரிவின் பிரகாரம் பிரதமரின் உடன்பாட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எழுத்து மூலம் பணித்துள்ளார்.
அதன்படி, அரசியலமைப்பின் 44/3 வது பிரிவின்படி பிரதமர் அதற்கு தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.