நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
பேருந்து விபத்து தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து வினவிய போதே ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்
மேலும் யாழ்ப்பாணம் – கொழும்பு மற்றும் ஏனைய நெடுந்தூரங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கவுள்ளதாக கூறினார்.
A-9 பாதையில்பயணம் செய்யும் பேருந்துகளை 10 நிமிடங்கள் நிறுத்தி சாரதிகளை சோர்வு தன்மையில் இருந்து நீக்குவதற்கு முயற்சி எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு ஒவ்வொரு மாத கடைசியிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் தரப் பரிசோதனையினை உறுதிப்படுத்தவுள்ளதாகவும் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.